தாய்லாந்தில் விக்ரம், நயன்தாரா!

‘இருமுகனு’க்காக தாய்லாந்து பறந்த விக்ரம், நயன்தாரா!

செய்திகள் 8-Jun-2016 1:25 PM IST VRC கருத்துக்கள்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் சென்னையில் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை ‘இருமுகனு’க்காக படமாக்கிய படக்குழுவினர் இப்போது விக்ரம், நயன்தாரா பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்க தாய்லாந்து பறந்துள்ளனர். நடன இயக்குனர் பிருந்தா நடன அமைப்பில் படமாக்கப்படும் இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று துவங்கி சில நாட்கள் அங்கு நடைபெறவிருக்கிறது! இதனை படக்குழுவினரே தெரிவித்துள்ளனர். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் பிரம்மாண்ட மாக தயாரித்து வரும் ‘இரு முகனி’ல் நித்யா மேன்னும் ஒரு கதாநாயகியாக ந்டிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டோரா - டீசர்


;