பெங்களூர் விமான நிலையத்தில் சோதனையின்போது, இசையமைப்பாளர் இளையராஜாவின் உடைமைகளை பரிசோதித்த பாதுகாவலர்கள், அவர் கொண்டு வந்திருந்த பிரசாதப் பைகளை அபகரித்துக் கொண்டதாக நேற்று செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன. இந்த செய்தி பார்த்து கொந்தளித்த ராஜா ரசிகர்களும், அவரின் நெருங்கிய நண்பர்களும் இளையராஜாவுக்கு போன் செய்து இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, என்ன நடந்தது என்பது குறித்து இளையராஜாவே தற்போது வீடியோ பேட்டி மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
‘‘நாட்டில் எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்க, இதுபோன்ற தேவையில்லா செய்திகளில் மக்கள் ஏன் தங்களின் நேரத்தை விரையம் செய்கிறார்கள் என வருத்தமாக இருக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகள் இல்லையென்றால் இந்தியா, இந்தியாவாக இருக்காது. அவர்களின் கடமையைச் செய்யவிடுங்கள். சோதனை என்று வரும்போது உங்களைப்போல் நானும் ஒரு சாதாரண ஆள்தான். அதனால் நான் சிறுமையடைவோ, அவமரியாதை செய்யப்பட்டதாகவோ நினைக்கவில்லை. மற்றபடி எப்போதும் நான் ராஜாதான். மீடியாக்கள் இதுபோன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன்!’’ என்று நடந்த விஷயங்களுக்கு விளக்கமளித்துள்ளார் இளையராஜா.
இப்போது அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஃபேவரிட் பாடகராக விளங்கி வருபவர் சித்...
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆக்ஷன்’. இந்த படத்தை தொடர்ந்து விஷால், மிஷ்கின்...
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’....