‘சிங்கம் 3’ல் சூர்யாவுடன் இணைந்த சூரி!

‘சிங்கம்’ படத்தில் விவேக், ‘சிங்கம் 2’ல் விவேக், சந்தானம் ஆகியோரைத் தொடர்ந்து ‘சிங்கம் 3’ல் சூரி இணைந்துள்ளார்

செய்திகள் 8-Jun-2016 11:52 AM IST Chandru கருத்துக்கள்

சூரி காட்டில் தற்போது அடைமழை. காரணம், அவர் நடித்த படங்களில் அவருடைய காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதுதான். சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, விஷாலுடன் ‘மருது’, விஷ்ணுவுடன் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என இந்த வருடத்தில் அவரின் லிஸ்ட் பெரிது. இந்த சந்தோஷங்களோடு இப்போது சூர்யாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சூரி. ஏற்கெனவே ‘அஞ்சான்’ படத்தில் இணைந்து நடித்த சூரி, இப்போது சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்திலும் காமெடிக்காக இணைந்துள்ளார். ரோபோ ஷங்கர், பாடகர் க்ரிஷ் ஆகியோரும் காமெடிக்காக ஏற்கெனவே ‘சிங்கம் 3’ல் இணைந்துள்ளனர்.

சிங்கம் முதல் பாகத்தில் விவேக்கும், சிங்கம் இரண்டாம் பாகத்தில் விவேக்குடன் இணைந்து சந்தானமும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;