சித்தார்த்துடன் 3-வது முறையாக இணையும் சந்தோஷ் நாராயணன்!

‘உனக்குள் ஒருவன்’, ‘ஜிகர்தண்டா’ படங்களை தொடர்ந்து மீண்டும் இணையும் சித்தார்த், சந்தோஷ் நாராயணன்!

செய்திகள் 8-Jun-2016 11:36 AM IST Top 10 கருத்துக்கள்

‘கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.க்ரிஷ் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘SHAITHAN KI BACHCHAA’ என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக் மற்றும் சித்தார்த்துடன் கை கோர்க்கவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு அரவிந்த் சிங், படத்தொகுப்பு ஆண்டனி, கலை இயக்குனராக கே.அறுசுவாமி ஆகியோர் பணியாற்றவிருக்கிறார்களாம். சித்தார்த்தும், சந்தோஷ் நாராயணனும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;