ஜெய்சங்கர் படத் தலைப்பில் நடிக்கும் விக்ரம் பிரபு!

’வாகா’,  ‘வீர சிவாஜி’ படங்களை தொடர்ந்து ஜெய்சங்கர் பட தலைப்பில் நடிக்கும் விக்ரம பிரபு!

செய்திகள் 8-Jun-2016 11:07 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடிப்பில் ‘தொடரி’ படத்தை தயாரித்து வரும் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். பெயரிடப்படாமலே படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு இப்போது ‘முடி சூடா மன்னன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதே பெயரில் 1978-ல் ல் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, மனோரமா ஆகியோர் நடிப்பில் விட்டல் இயக்கத்தில் ஒரு படம் வெளியியாகியுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்புகளை மீண்டும் புதிய படங்களுக்கு சூட்டி வரும் நிலையில் இப்போது ஜெய்சங்கர் நடித்த ஒரு படத்தின் தலைப்பும் புதிய படம் ஒன்றுக்கு சுட்டப்பட்டுள்ளது. தற்போது ‘வாகா’, ‘வீரசிவாஜி’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு நடிக்கும் ‘முடி சூடா மன்னன்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன் தவிர்த்து இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் உண்டாம்! அந்த ஹீரோயினுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறதாம். ‘தொடரி’, ‘முடி சூடா மன்னன்’ படங்களுடன் வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமொன்றையும் தயாரிக்க இருக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;