விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் மடோனா செபாஸ்டியன்!

ஏஜிஎஸ் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி முடிவு செய்யப்பட்டுள்ளார்.

செய்திகள் 8-Jun-2016 10:18 AM IST VRC கருத்துக்கள்

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த் என்றும் இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, டி.ராஜேந்தர் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்திற்கான கதாநாயகி வேட்டையில் கௌதம் மேன்னின ‘அச்சம் என்பது மடமையடா’ பட ஹீரோயின் மஞ்சிமா மோகனும் பரிசீலனையில் இருந்தார்! ஆனால் இப்போது விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இணைந்து நடித்த மடோனா செபாஸ்டியன் தேர்வாகியுள்ளார் என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர். ஆனால் இப்படத்தில் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியுடன் கை கோர்த்துள்ளார் கே.வி.ஆனந்த்! இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை அபிநந்தன் ஏற்றிருக்க, ., கலை இயக்குனராக கிரண் பணி புரிகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர். அடுத்த மாதம் (ஜூலை) படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திறகான் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டீசர்


;