‘கால்பந்து’க்காக ரஹ்மான் இசையில் குரல்கொடுக்கும் விராட் கோலி!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் விராட் கோலி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறார்.

செய்திகள் 7-Jun-2016 12:00 PM IST Chandru கருத்துக்கள்

கால்பந்து ஜாம்பவான் பீலேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வெளிவந்திருக்கும் ஹாலிவுட் படமான ‘பீலே : பெர்த் ஆஃப் எ லெஜன்ட்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது உலக கவனம் பெற்றுள்ளது. அந்தவகையில், தற்போது மீண்டும் ‘கால்பந்து’ விளையாட்டுக்காக தன் பங்களிப்பை வழங்கவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவில் நடைபெறவிருக்கும் ‘பிரீமியர் பட்ஸெல் லீக்’ உள்ளரங்க கால்பந்து தொடருக்கான ஆல்பம் ஒன்றை விரைவில் வெளியிடவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஆல்பத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குரல் கொடுக்கவிருக்கிறார். அவருக்காக ‘ராப்’ பகுதி ஒன்றை உருவாக்கியுள்ளாராம் ரஹ்மான். ‘நாம்ஹை ஃபட்சல்’ என்ற இப்பாடலுக்கான ஒலிப்பதிவு விரைவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;