செல்வா - யுவன் மேஜிக்கல் இசையில் எஸ்.ஜே.சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில் உருவாகிவரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

செய்திகள் 7-Jun-2016 11:16 AM IST Chandru கருத்துக்கள்

‘புதுப்பேட்டை’க்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் கூட்டணி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக இணைந்துள்ளது. கூடேவே கௌதம் மேனனின் தயாரிப்பு, செல்வாவின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகன் என இப்படத்தின் மேல் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம். செல்வாவின் இயக்கத்தில் உருவாகும் முதல் ஹாரர் படம் என்ற பெருமையும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’க்கு உண்டு.

இப்படத்திற்காக யுவன் இசையில் உருவான மெலடிப் பாடல் ஒன்றின் படப்பிடிப்பை கடந்த வாரம் நடத்தி முடித்துள்ளார் செல்வா. அதில் எஸ்.ஜே.சூர்யாவும், படத்தின் நாயகி ரெஜினா கெஸன்ட்ராவும் கலந்து கொண்டுள்ளார்களாம். சென்னை வளசரவாக்கத்திலுள்ள ஏஆர்எஸ் கார்டனில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;