1980ல் ரஜினி, 2007ல் அஜித், 2018ல் சிம்பு?

ட்விட்டர் மூலம் ரசிர்களுடன் உரையாடிய சிம்பு தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியிட்டுள்ளார்!

செய்திகள் 7-Jun-2016 10:14 AM IST Chandru கருத்துக்கள்

‘இது நம்ம ஆளு’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த உற்சாகத்திலிருக்கிறார் சிம்பு. அந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நேற்று ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை முன் வைத்தனர். சிம்புவின் பதில்கள் அவருடைய ரசிகர்களை ஆச்சரிய சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டது. காரணம், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்து தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ‘கான்’ படம் மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு... ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் தானும் நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது அவரது ரசிகர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

1980ல் ரஜினியும், 2007ல் அஜித்தும் நடித்த ‘பில்லா’ படம் சிம்புவின் நடிப்பில் 2018ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ‘சிலம்பாட்டம்’ படத்தின் க்ளைமேக்ஸில் ‘பில்லா’ அஜித்தை இமிடேட் செய்து நடித்துள்ளது குறிப்பிட்டுள்ளது. அதோடு, ‘பில்லா’வில் ‘டான்’ அஜித் பயன்படுத்திய அதே கோட்சூட்டையே ‘சிலம்பாட்ட’த்திலும் பயன்படுத்தினாராம் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;