தலைமறைவான ‘சதுரங்க வேட்டை’ கதாநாயகி!

தலைமறைவான  ‘சதுரங்க வேட்டை’ கதாநாயகி!

செய்திகள் 6-Jun-2016 3:47 PM IST VRC கருத்துக்கள்

‘சதுரங்க வேட்டை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இஷாரா! இந்த படம் தவிர ‘பப்பாளி’ என்ற படத்திலும் நடித்துள்ள இஷாரா இப்போது ‘கல்லூரி’ படப் புகழ் அகில் கதாநாயகனாக நடிக்கும் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் நடித்து ருகிறார். இந்த படத்தை ‘ TN. 75 கே.கே.கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசஃப் லாரன்ஸ் தயாரித்து வருகிறார். கேவின் ஜோசஃப் இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடித்து வந்த இஷாரா தலைமறைவாகி விட்டதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிசை செய்தியில்,

‘‘இஷாராவை 28.02.2016 அன்று ஒரு தொகை சம்பளம் பேசி 75ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நங்கள் கேட்டது 20 நாட்கள் தான். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் நடித்து கொடுத்தார். அந்த இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் என்பது மறக்க முடியாத உண்மை. அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு நடிக்க வர அழைத்தபோது ‘நான் துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன், வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன்… இப்படி வாட்ஸ்-அப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதை வேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார். நாங்கள் தொடர்ந்து முயற்சித்தும் அவர் வரவில்லை. கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் மூலம் முயற்சித்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை. அதனால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

படைவீரன் - ட்ரைலர்


;