சவுண்ட் என்ஜினீயரை மணக்கும் ‘24’ பட இயக்குனர்!

சவுண்ட் என்ஜினீயரை திருமணம் செய்கிறார் இயக்குனர் விக்ரம் குமார்!

செய்திகள் 6-Jun-2016 3:17 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூர்யாவின் ‘24’. சூர்யா தயாரித்து, நடித்த இப்படத்தை இயக்கிய விக்ரம் குமார், சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீநிதி என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். ஸ்ரீநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் சவுண்ட் என்ஜினீயராக இருப்பவர். சூர்யாவை வைத்து விக்ரம் குமார் இயக்கிய ‘24’ படத்திற்கு இசை அமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் இப்படத்தின் இசை சம்பந்தப்பட்ட வேலைகள் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் நடைபெற்றபோது விக்ரம் குமாரும், ஸ்ரீநிதியும் சந்தித்துள்ளனர். அப்போது நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்’, ‘24’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கில் ‘இஷ்க்’, ‘மனம்’ ஆகிய படங்களை இயக்கியதோடு, ஹிந்தி படமொன்றையும் இயக்கியுள்ளார். ‘24’ படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;