‘தொடரி’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

பிரபு சாலமன், தனுஷ், கீர்த்தின் சுரேஷ் ஆகியோர் முதன் முதலாக இணைந்துள்ள ‘தொடரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 6-Jun-2016 2:18 PM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘தொடரி’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய சில பிரபலங்களின் பேச்சு விவரம் வருமாறு:

‘தொடரி’ படத்தில் நடித்திருக்கும் சின்னி ஜெயந்த் பேசும்போது, ‘‘பல வெற்றி படங்களை தந்த சத்ய ஜோதி ஃபிலிஸின் தயாரிப்பு இது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘மூன்றாம் பிறை’, ‘இதயம்’ ஆகிய படங்களின் கிளைமேக்‌ஸ் ரயில் நிலையத்தில் நடைபெறும். அந்த படங்களை போல இப்படத்தின் கிளைமேக்ஸும் ரயில் நிலையத்தில் தான் நடைபெறும். ‘மூன்றாம் பிறை’, ‘இதயம்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைப் போல இப்படமும் மாபெரும் வெற்றி பெறும். ரயில் சென்டிமென்ட் தொடரும்’’ என்றார்.

‘தொடரி’யின் ஸ்டன்ட் இயக்குனர் ‘ஸ்டன்’ சிவா பேசும்போது, ‘‘நான் இதுவரை பணியாற்றிய படங்களில் இப்படத்திற்கான உழைப்பு ஜாஸ்தி! படத்தின் இடைவேளைக்கு பிறகு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் தான். இந்த காட்சிகளில் தனுஷ் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை 8 கேமிராக்கள் பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் பிரபு சாலமன். இப்படத்தின் வெற்றியில் சந்தேகமில்லை’’ என்றார்.
நடிகர்கள் தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முதலானோர் பேசும்போது, ‘‘ தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார்’’ என்றனர்.

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், தனுஷ், கீர்த்தி சுரேஷ், பிரபு சாலமன் பற்றி பேசும்போது, ‘‘ரயில் மேல் ஒரு மயில் (கீர்த்தி சுரேஷ்), அதை காதலிக்கும் ஒரு புயல் (தனுஷ்), அதற்கு பிரபு சாலமன் விடும் ரயில்’ என்றார்! நடிகை கீர்த்தி சுரேஷ் ஊர்வசி, ரம்பை, மேனகா முதலானோரை மிக்சியில் போட்டு அரைத்தால் கிடைக்கும் அழகான கலவை! அவ்வளவு அழகாக இருக்கிறார்’’ என்றார்.
‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசும்போது, ‘‘இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் ஆகும்! இப்படம் ஹாலிவுட் படம் மாதிரி மிகப் பிரம்மாண்ட படமாக் அமைந்துள்ளது. தனுஷ் தம்பி நடிப்பில் நடிகர் திலகம் பாதையில் பயணித்து வருகிறார். அவர் இன்னும் பல சிகரங்களை தொடும்’’ என்றார்.

‘தொடரி’ இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது, ‘‘என்னோட ‘கயல்’ 25-ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்திற்காக 28-ஆம் தேதி தனுஷை சந்தித்தேன். அவர் கதையை கேட்கவே இல்லை! எப்போது கால்ஷீட் வேண்டும்? என்று மட்டும் தான் கேட்டார். அன்றிலிருந்து இன்று வரை அவ்வளவு ஒத்துழைப்பு தந்துள்ளார் தனுஷ்! இப்படத்தில் அவர் பூச்சியப்பன் என்ற கேரக்டரில் வாழ்ந்திருக்கிரார். இது அவரோட 30-வது படம்! ‘கும்கி’யில் யானையுடன் நீண்ட நாட்கள் பயணித்ததை போல இப்படத்தில் ரயிலுடன் 30 நாட்கள் பயணித்துள்ளோம். சொல்லப் போனால் ரயில் காட்சிகளை படமாக்க மூச்சு முட்டினோம். இந்த படம் இந்த அலவுக்கும் நன்றாக வந்திருக்கிறது என்றால் லைட் பாய்ஸிலிருந்து, நடிகர்கள் வரை அனைவரும் தந்த ஒத்துழைப்பும் கடின உழைப்பும் தான்’’ என்றார்.

‘தொடரி’ கதாநாயகன் தனுஷ் பேசும்போது, ‘‘இங்கு பேசிய எல்லோரும் நான் இந்த படத்திற்காக டூப் எல்லாம் போடாமல் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாக சொன்னார்கள். உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. அப்படி என்னை எல்லோரும் பார்த்துக் கொண்டார்கள். இயக்குனர் பிரபு சாலமன் தான் இப்படத்தின் ஜீவன்! அவர் ஒவ்வொரு காட்சியையும் நடித்து காட்டுவார். அதை தான் நான் செய்துள்ளோம். அவர் சொன்ன மாதிரி நான் கதையை கேட்காமல் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் நடிக்க துவங்கிய பிறகு தான் எனக்கு ‘தொடரி’யோட கதை ஓரளவுக்கு தெரிய வந்தது. அதற்கு காரணம் பிரபு சாலமன் மீது எனக்கு இருந்த நம்பிக்கை தான். கீர்த்திக்கு இதில் நல்ல கேரக்டர். என்னை விட அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இங்கு பேசியவர்கள் எல்லாம் என்னை என் தகுதிக்கு மீறி பாராட்டி பேசினார்கள்! நான் ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை! அந்த பாராட்டு எல்லாம அவர்களின் அன்பின் வெளிப்பாடு என்று எனக்கு தெரியும்! இது போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்த ‘சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் சாருக்கு என் நன்றி’’ என்று முடித்தார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;