‘மூடர் கூடம்’ நவீன் தயாரிக்கும் கொளஞ்சி!

‘மூடர் கூடம்’ படத்தை தயாரித்து, இயக்கிய நவீன்,அடுத்து தயாரிக்கும் படம்  ‘கொளஞ்சி’.

செய்திகள் 4-Jun-2016 3:14 PM IST VRC கருத்துக்கள்

‘மூடர் கூடம்’ படத்தை தயாரித்து, இயக்கிய நவீன்,அடுத்து தயாரிக்கும் படம் ‘கொளஞ்சி’. இயக்குனர்கள் சிம்பு தேவன், மற்றும் நவீனிடம் பணியாற்றிய தன்ராம் சரவணன் ‘கொள்ஞ்சி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘‘தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம், இதனால் ஏற்படும் விளைவுகள் தான் ‘கொளஞ்சி’ படத்தின் கதை’’ என்கிறார் இயக்குனர் தன்ராம் சரவணன்! இப்படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி முக்கிய கேரக்டர்களில் நடிக்க, இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின், ‘பிச்சைக்காரன்’ படப் புகழ் மூர்த்தி, சுரேஷ், ஆதிரா, ருஜீல், கிருஷ்ணா, ‘நாடோடிகள்’ கோபால் ஆகியோரும் நடிக்கின்றனர். இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளதாக தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொளஞ்சி ட்ரைலர்


;