விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கி வரும் படம் ‘பைசா’. ‘பசங்க’ புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை கான்பிடண்ட் ஃபிலிம் கஃபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், ஆர்.கே.ட்ரீம் வேல்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ரிலீசுக்கு தாயாராகி வரும் இப்படத்தில் நடித்திருக்கும் ஆரா சினிமா பத்திரிகை தொடர்பாளர் துரைபாண்டியின் மகள் ஆவார். அவர் ‘பைசா’ படத்தில் நடித்திருப்பது குறித்து கூறும்போது,
‘‘எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வர காரணமாக இருந்தவர் என் தந்தை தான். ரசிகர்களின் ஏதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே ஒரு நடிகையின் முக்கியமான கடமை. அந்த வகையில் என பங்களிபு கண்டிப்பாக இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். விஜய் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. ‘பைசா’ சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ‘சாட்டை’, ‘கோலி சோடா’, ‘காக்கா முட்டை’ படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகி உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்’’ என்றார்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...