வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம்

‘சூரி & கோ’வின் காமெடி கலாட்டா!

விமர்சனம் 3-Jun-2016 11:55 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ezhil
Production : Vishnu Vishal Studioz, Ezhilmaaran Production
Starring : Vishnu, Nikki Galrani, Soori
Music : C. Sathya
Cinematography : Shakthi
Editing : Ananda Lingakumar

‘தேசிங்கு ராஜா’, ‘மனம் கொத்தி பறவை’, ‘வெள்ளக்கார துரை’ பட வரிசையில் எழிலின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ எப்படி?

கதைக்களம்
டெய்லர் கடை வைத்திருப்பவர் விஷ்ணுவிஷால்! இவரது நண்பவர் சூரி! எம்.எல்.ஏ.வான ரோபோ சங்கர் இலவசமாக 25 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும்போது அதில் ஒரு ஜோடி குறைய, சூரியை புகழ்பெற்ற நாட்டியக்காரியான புஷ்பா கழுத்தில் தாலி கட்ட வைக்கிறார் விஷ்ணு விஷால்! நேர்மையான முறையில் போலீஸ் வேலையில் சேர துடிக்கும் நிக்கி கல்ராணிக்கு அவரது அப்பா வேண்டுகோளின் படி எம்.எல்.ஏ.வான ரோபோ சங்கரிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து, நிக்கிக்கு போலீஸ் வேலை கிடைக்க உதவி செய்கிறார் விஷ்ணு விஷால்! இந்நிலையில், மந்திரி ஒருவர் 500 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருக்கும் ரகசியத்தை எம்.எல்.ஏ.வான ரோபோ சங்கரிடம் கூறிவிட்டு இறந்து போக, அந்த பணத்தை கைபற்றுவதற்காக ஒரு கும்பல் ரோபோ சங்கரை துரத்துகின்றனர்! இந்த களேபரத்தில் ரோபோ சங்கருக்கு தலையில் அடிப்பட்டு பழைய நினைவுகள் இழந்த நிலையில் படுத்த படுக்கையாகிறார்! ரோபோ சங்கர் நினைவு திரும்பினால் தான் நாட்டியக்காரி புஷ்பாவிடம் இருந்து தான் விடுபட முடியும் என்ற அவஸ்தையில் இருக்கும் சூரி, போலீஸ் வேலைக்காக கொடுத்த 10 லட்சம் ரூபாயை மீட்க போராடும் நிக்கி கல்ராணி, 500 கோடி ரூபாய் பணத்தை ஆட்டை போட நினைக்கும் கும்பல்… இப்படி இவர்களுக்குள் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

படம் பற்றிய அலசல்
லாஜிக் மற்றும் டெக்னிக்கல் விஷ்யங்களை அதிக கவனத்தில் கொள்ளாமல், படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் எழில்! அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார். அதற்கு படத்தில் பங்காற்றிய அத்தனை கலைஞர்களின் பங்களிப்பு பக்க பலமாக அமைந்துள்ளது. படத்தின் ஆரம்பம் முதல் காமெடியாக செல்லும் திரைக்கதையில், இறுதி 25 நிமிட காமெடி காட்சிகள் ஹைலைட்டாக அமைந்துள்ளது. சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் கவனம் பெறுகின்றன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை குறிப்பிடும்படியாக அமையவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு
விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ஆனால் விஷ்ணு விஷாலுடன் படம் முழுக்க வரும் சூரி காமெடியில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ரோபோ சங்கர் சில இடங்களில் போரடிக்க வைக்கிறார் என்றாலும் கிளைமேக்ஸ் காட்சியில் அதை சரி செய்து நம்மை நிறைய சிரிக்க வைக்கிறார். ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், லட்சுமணன் முதலானோரும் சிரிக்க வைக்கின்றனர்.

பலம்
காமெடி விஷயங்கள்
விஷ்ணு விஷால், சூரி, ரோபோ சங்கர் முதலானோரின் பங்களிப்பு

பலவீனம்
லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாதது
டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்…
லாஜிக் விஷயங்களை பொருட்படுத்தாமல் இரண்டு மணிநேரம் சிரித்து பொழுதை கழிக்க விரும்புவோருக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது இந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

ரேட்டிங் : 4/10

ஒரு வரி பஞ்ச் :
‘சூரி & கோ’வின் காமெடி கலாட்டா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;