விஜய்யின் 60வது படத்தை ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்குகிறார். கிராமத்து கதைக்களத்தைக் கொண்ட இந்த குடும்ப படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தற்போது 2வது ஷெட்யூல் ஹைதராபாத்தில் நேற்று துவங்கியுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘விஜய் 60’ படப்பிடிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் சிலரும் படப்பிடிப்பு கலந்து கொண்டுள்ளார்களாம். திருமண விழா பாடல் ஒன்று அங்கு பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதோடு விஜய்யின் அறிமுகப் பாடலையும் எடுக்கவிருக்கிறார்களாம்.
இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாய் சேகர் இயக்கியுள்ள படம் ‘அருவம்’. இந்த...
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. ‘NOTA’ படத்தின் மூலம்...
1. மான்ஸ்டர்‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில்...