‘மாயா’ அஸ்வின் சரவணனின் அடுத்த படம்?

நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை பயமுறுத்திய ‘மாயா’ படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல்

செய்திகள் 3-Jun-2016 10:46 AM IST Chandru கருத்துக்கள்

குறும்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனர்களாக அறிமுகமானவர்களின் பட்டியலில் ‘மாயா’ படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கும் முக்கிய இடமுண்டு. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மாயா’வில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த இப்படம், விமர்சனரீதியாக ‘ஹாலிவுட் தர’ ஹாரர் த்ரில்லர் என்ற பெயரைப் பெற்றதோடு, தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய லாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாகவும் அமைந்தது.

தற்போது, அஸ்வின் சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்தை, ‘மோமன்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜி.ஏ.ஹரி கிருஷ்ணன் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;