‘கபாலி’ ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த தாணு!

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

செய்திகள் 3-Jun-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்திற்குப் பிறகு கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘கபாலி’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘கபாலி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஞ்சித்தின் 3வது படமான ‘கபாலி’க்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு படங்களின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் என்பதாலும், ரஜினி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது முதல்முறை என்பதாலும் ‘கபாலி’ பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஜூன் 12ஆம் தேதி ‘கபாலி’ படத்தின் பாடல்களை பிரம்மாண்டமான முறையில் வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் தாணு தற்போது அறிவித்துள்ளார். விழா நடக்கும் இடத்தினை முடிவு செய்வது குறித்த ‘கபாலி’ டீம் விவாதித்துக் கொண்டிருக்கிறதாம். சத்யம் திரையரங்கம், நேரு ஸ்டேடியம், ஒய்.எம்.சி.ஏ மைதானம் ஆகியவை பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;