தனுஷின் ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் எப்போது?

‘காக்கா முட்டை’, ‘தங்க மகன்’  படங்களை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் வெளியாகும் படம் ‘அம்மா கணக்கு’

செய்திகள் 2-Jun-2016 12:06 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு திரைப்பட விமர்சகர்களின் பராட்டுக்கள் பெற்ற ஹிந்தி படம் ‘நில் பேட்டே சனாடா’. இப்படத்தை தமிழில் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் தயாரித்துள்ளார் தனுஷ். ஹிந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இயக்கியுள்ளார். அம்மா- மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டம் தான் இப்படத்தின் மைய கரு! சமுத்திரக்கனி, ரேவதி, அமலா பால் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட 50 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து இப்படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ள படக்குழுவினர் ‘அம்மா கணக்கு’ திரைப்படத்தை இம்மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இப்படம் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு என்பதால் இப்படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;