அருண் விஜய்யுடன் இணையும் மகிமா நம்பியார்!

அருண் விஜய்யின் 23 ஆவது படமான ‘குற்றம் 23’-ல் கதாநாயகியாக நடிக்கிறார் மகிமா நம்பியார்!

செய்திகள் 2-Jun-2016 11:26 AM IST VRC கருத்துக்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘குற்றம் 23’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருண் விஜய்யின் 23வது படமான இப்படத்தில் அருண் விஜய்யுடன் யார் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. அந்த தகவலை இப்போது படக்குழுவின்ர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ‘குற்றம் 23’-ல் அருண் விஜய்க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். இதுவரை கிராமத்து வேடங்களில் நடித்து வந்த மகிமா நம்பியார் இப்படத்தில் சிட்டி பெண்ணாக நடிக்கிறார். இந்தர் குமாரின் ‘ரேதான் தி சினிமா பீப்புள்’ நிறுவனமும், ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;