‘ராஜா ராணி’யின் சாதனையை முறியடிக்குமா விஜய்யின் தெறி?

அட்லி, விஜய் கூட்டணியின் ‘தெறி’ 50 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

செய்திகள் 2-Jun-2016 10:53 AM IST VRC கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில், அட்லி இயக்கி, விஜய் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெளியான படம் ‘தெறி’. ‘ராஜா ராணி’ எனும் வெற்றிப் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, இயக்குனர் மகேந்திரன், நடிகை மீனாவின் மகள் நைனிகா என பலர் நடித்திருந்தனர். இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50ஆவது படமாகவும் அமைந்திருந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு படமாக ‘தெறி’ அமைந்திருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘தெறி’ வெளியாகி இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் அப்படக்குழுவினர்! அட்லியின் முதல் படமான ‘ராஜா ராணி’ வித்தியாசமான திரைக்கதை அமைப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்து ஓடியது! அதைப்போல அட்லியின் இரண்டாவது படமான ‘தெறி’ 100 நாட்களை எட்டி, ‘ராஜா ராணி’யின் சாதனையை முறியடிக்குமா என்பது தான் ரசிகர்களின் இபோதையை எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;