விஜய், பிரபு தேவா படத்தில் பாலிவுட் நடன இயக்குனர்!

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னாவுடன் இணைந்து நடிக்கிறார் ஃபாராகான்!

செய்திகள் 2-Jun-2016 10:16 AM IST VRC கருத்துக்கள்

பிரபுதேவா, தமன்னா ஜோடியாக நடிக்கும் படம் DEVI(L). விஜய் இயக்கி வரும் இப்படத்தில் சோனு சூட்டும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். எமி ஜாக்சன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு விஜய்யுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் கதாசிரியர் பவுல் ஆரோன் கதை எழுதியுள்ளார். இது தவிர பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடன இயக்குனருமான ஃபாராகானும் இப்படத்தில் நடித்துள்ளர். இது குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, ‘‘பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் ஆகிய முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திகில் படங்கள் என்றால் இப்படி தான் இருக்கும் என்ற ரசிகர்களின் எண்ணங்களில் இருந்து இந்த DEVI(L) மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். இப்படத்தின் ஒரு காட்சிக்கு நடன கலைஞர் ஒருவர் தேவைப்பட்டார். அந்த கேரக்டருக்கு ஃபாராகானை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதால அவரையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளோம். பாலிவுட்டில் பிரபலமான அவர் இப்படத்தில் நடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகு. இப்படி பல பெரிய கலைஞர்களை வைத்து இப்படத்தை தயாரிக்க முன் வந்த டாக்டர் கணேஷுக்கு நான் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;