‘ஒரு நாள் கூத்து’ விழாவில் தினேஷ், கருணாகரன் சுவாரஸ்ய பேச்சு!

‘ஒரு நாள் கூத்து’ விழாவில் தினேஷ், கருணாகரன் சுவாரஸ்ய பேச்சு!

செய்திகள் 1-Jun-2016 12:51 PM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ பேனரில் செல்வகுமார் தயாரித்திருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். திருமணம் பற்றிய கதை ‘ஒரு நாள் கூத்து’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் வெங்கடேசன். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் நேரடியாக இப்படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தினேஷ் பேசும்போது, ‘‘இதற்கு முன் நான் நடித்த படங்களில் எல்லாம் தலை முடியை வாராமல் பரட்டை தலையுடன் தான் நடித்தேன். இப்படத்தில் தலைமுடியை வாரி, டீசன்டாக டிரெஸ் செய்து நடித்துள்ளேன். இது எனக்கு புது அனுபவமாக இருக்கு’’ என்றார்!

நடிகர் கருணாகரன் பேசும்போது, ‘‘எல்லோருக்கும் திருமணம் என்பது ஒரு நாள் கூத்து! ஆனால் எனக்கு அது அரை நாள் கூத்தாக தான் அமைந்தது. அதற்கு காரணம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்! எப்படி என்றால் ‘கப்பல்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தான் என் திருமணம் நடந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் நான் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு போய் விடுவேன் என்பது ‘கப்பல்’ பட குழுவினருக்கு தெரியும். அதனால் அவர்கள் அந்த இரண்டு நாட்களில் என் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் எடுத்து முடிக்க வேண்டும் என்று என் திருமணம் நடந்து முடிந்ததும் என்னை கையோடு ‘கப்பல்’ படப்பிடிப்புக்கு அழைத்து சென்றார்கள். அதனால் என் திருமண்ம் அரை நாள் கூத்தாக மாறியது. இதற்கு காரணம் கார்த்திக் சுப்பராஜ் தான்’’ என்றார் தமாஷாக!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;