நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் ‘வட சென்னை’ படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 15-ஆம் தேதி துவங்கவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வட சென்னை பின்னணியில் கதை சொல்லப்படும் இப்படத்திற்காக மிகப் பெரிய ஜெயில் செட் ஒன்றை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் வேலைகள் முடிந்ததும் அந்த ஜெயில் செட்டில் வட சென்னையின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷுடன் சமந்தா, ஆன்ட்ரியா முதலானோர் நடிக்க இருக்கிறார்கள். இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
Direction: Priya Krishnaswamy Production: Reckless Roses Cast: R Raju, Sukumar Shanmugam, SP...