‘சூர்யா நிஜ ஹீரோ’ என்பதை தெளிவுபடுத்திய புஷ்பா!

இளைஞர் ஒருவரை சூர்யா அடித்துவிட்டதாக மீடியா பரபரப்பாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்க, உண்மையில் நடந்ததை தெளிவுபடுத்தியிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

செய்திகள் 1-Jun-2016 10:51 AM IST Chandru கருத்துக்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாறு பாலம் அருகே ஒரு பெண்ணுடன் இரு வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த நேரத்தில் அந்த வழியே காரில் வந்த சூர்யா, காரிலிருந்து இறங்கி வந்து அந்த வாலிபர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, பெண்ணை பத்திரமாக சொல்லும்படி கூறிவிட்டுச் சென்றாராம். ஆனால், சம்பந்தப்பட்ட வாலிபர், சூர்யா தன்னை அடித்துவிட்டதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததோடு, சூர்யாமீது போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார். இந்த பரபரப்புகளுக்கு இடையில் நடிகர் சூர்யா அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணான புஷ்பா என்பவரே, தனக்கு என்ன நேர்ந்தது, சூர்யா என்ன செய்தார் என்பதை விளக்கமாக ட்வீட் செய்திருக்கிறார். நடிகர் சூர்யாவும் அவருக்கு நன்றி சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்தார்.

புஷ்பா தனது ட்வீட்டில்.... ‘‘நேற்று என்னிடம் தவறாக நடக்க முயன்ற இரண்டு பையன்கள் தக்க சமயத்தில் வந்து தடுத்து நிறுத்தியதற்காக சூர்யாவிற்கு மிக்க நன்றிகள். என்மீது கை வைக்க விடாமலும் சூர்யா தடுத்தார். அந்த பையன்கள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். மேலும், என்மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்போவதாகவும் சொன்னார்கள். பெரிய கூட்டத்திற்கு நடுவே தனியாளாக மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக சூர்யா வந்து எனக்கு உதவி செய்தார். தக்க தருணத்தில் வந்து உதவிய சூர்யாவிற்கு நன்றிகள்!’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவும், ‘‘இத்தனை நாடகங்கள் அரங்கேறிய பிறகும் தைரியமாக முன்வந்து நடந்த உண்மையைச் சொன்னதற்கு என் நன்றிகள். உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளவும்!’’ அந்த பெண்ணிற்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்


;