கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேபதி நடித்திருக்கும் ‘இறைவி’ இந்த வாரம் ரிலீஸாகிறது. அதோடு... தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க, காத்து வாக்குல ரெண்டு காதல், இடம் பொருள் ஏவல், மெல்லிசை என அரை டஜன் படங்களையும் கையில் வைத்திருக்கிறார். இந்தப் படங்கள் இல்லாமல் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
அனேகன் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கம், நட்சத்திரங்கள் தேர்வு ஆகியவை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து டி.ராஜேந்தரும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இருவரும் கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களாக இப்படத்தில் நடிக்கிறார்களாம். ஜூலையில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார். அபி நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின், வில்லன் யார் என்பதை இறுதி செய்யும் பணியில் பிஸியாக இருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....