விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது. ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்திற்கான அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சி ஒன்றை சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்று துவங்கும் இந்த சண்டை காட்சியின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 200 ஸ்டன்ட் நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சண்டை காட்சி படத்தின் ஹைலட்ஸ்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா, கருணாகரன் முதலானோர் நடிக்கிறார்கள். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘இருமுகனு’க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ‘இருமுகன்’ படத்தின் மீதான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...