விஜய் ஆண்டனிக்கு வில்லனாகும் தயாரிப்பாளர்?

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தில் நடிக்க பிரபல தயாரிப்பாளர் ஒப்பந்தம்

செய்திகள் 31-May-2016 11:49 AM IST Chandru கருத்துக்கள்

பொறுமையாகவும், அமைதியாகவும் தனது வெற்றிகளை ருசித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். முதல் படமே 50 நாட்களைக் கடந்து ஓடியது. அதன் பிறகு வெளிவந்த ‘சலீம்’ படம் வெற்றிபெற்றது. சமீபத்தில் வெளியாகி இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இந்த வருடத்தில் லாபம் தந்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதோடு, தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கிறதாம். தற்போது சைத்தான், எமன் என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

‘நான்’ ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகிறது ‘எமன்’ திரைப்படம். பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக, தயாரிப்பாளரும் இயக்குனருமான தியாகராஜனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். முக்கியமான அரசியல்வாதி கேரக்டர் ஒன்றில் நடிக்கிறாராம் தியாகராஜன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;