மலேசிய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் ‘கபாலி’?

ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் கபாலியின் ‘மலாய்’ வெர்ஷன் வேறொரு நாளில் ரிலீஸாகிறது?

செய்திகள் 31-May-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

தலைவரின் ‘கபாலி’ அவதாரத்தைப் பார்க்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு. ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் கபாலி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், அதன் மலாய் வெர்ஷன் மட்டும் வேறொரு நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் மலேசிய ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மலேசியாவில் ‘கபாலி’ படம் ஜூலை 6ஆம் தேதிதான் வெளியாகும் என டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கபாலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதோடு, ஜூன் 10ஆம் தேதி சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ பாடல்களை வெளிடுவதற்கான வேலைகளும் இன்னொருபுறம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அன்றைய தினம் புதிய டிரைலர் ஒன்றும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;