‘முத்தின கத்திரிக்கா’ எப்போது மார்க்கெட்டுக்கு வரும்?

வெங்கட் ராகவன் இயக்கத்தில் சுந்தர்.சி, பூனம் பாஜ்வா, கிரண் ஆகியோர் நடித்திருக்கும் ‘முத்தின கத்திரிக்கா’ படத்திற்கு ரிலீஸ் தேதி அறவிப்பு

செய்திகள் 31-May-2016 10:42 AM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி.யின் ‘அவ்னி மூவிஸ்’ தயாரித்துள்ள படம் ‘முத்தின கத்திரிக்கா’. சுந்தர்.சி.யுடன் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற வெங்கட் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சுந்தர்.சி., பூனம் பஜ்வா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சிங்கம் புலி, ரவி மரியா, சதீஷ், விடிவி கணேஷ், சுமித்ரா, சிங்கப்பூர் தீபன் முதலானோரும் நடித்துள்ளனர். சுந்தர்.சி தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். சுந்தர்.சி.புதிதாக துவங்கியுள்ள ‘அவ்னி மியூசிக்’ என்ற நிறுவனத்தின் முதல் வெளியீடாக ‘முத்தின கத்திரிக்கா’வின் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள். நேற்று நடந்த இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சுந்தர்.சி பேசும்போது,

‘‘இது, மலையாளா ‘வெள்ளி மூங்கா’ படத்தின் ரீ-மேக் என்றாலும், அந்த கதையை விட திரைக்கதையை மேலும் மெருகேற்றி இயக்கியுள்ளார் வெங்கட் ராகவன். இவர் என் உதவியாளர் என்று சொல்வதை விட என் குடும்பத்தில் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தபோது தான் மலையாள ‘வெள்ளி மூங்கா’ படத்தை பார்த்தேன். அதை ரீ-மேக் செய்யலாம் என்று முடிவு செய்ததும் அதை இயக்கும் பொறுப்பை வெங்கட் ராகவனிடம் கொடுத்தேன். நான் நினைத்ததை விட அருமையான ஒரு காமெடி படமாக இயக்கியுள்ளார் அவர்! இதில் அரசியல் நய்யாண்டி, காதல், மோதல், காமெடி, சென்டிமென்ட் என எல்லா ஜனரஞ்சக அம்சங்களும் இருக்கிறது. இரண்டு மணிநேரம் போவது தெரியாத வண்ணம் இப்படத்தை படு ஜாலி படமாக இயக்கியுள்ளார் வெங்கட் ராகவன். அவருக்கு இப்படத்தின் மூலம் நல்ல எதிர்காலம் அமையும் என்பது என் நம்பிக்கை! இப்படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 17ஆம் தேதி ‘முத்தின கத்திரிக்கா’வை மார்க்கெட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் சுந்தர்.சி.

சுந்தர்.சி, பூனம் பஜ்வா ஜோடியாக நடிக்க, வெங்கட் ராகவன் இயக்கியுள்ள படம் ‘முத்தின கத்திரிக்கா’. அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியியுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவினர் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் ‘முத்தின கத்திரிக்கா’வுக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். வைபவ், சதீஷ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் (ஜூன்) 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக நடிகர் சதீஷ் தனது ட்வீட் செய்துள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வெள்ளி மூங்கா’ படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;