‘வேதாளம்’ ஸ்டைலில் இரண்டு அவதாரங்கள் எடுக்கும் விஜய்?

பரதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 60’ படத்தில் நெல்லை பாஷை பேசுகிறார் விஜய்!

செய்திகள் 31-May-2016 10:34 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்திற்குப் பிறகு தற்போது ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கத்தில் ‘விஜய் 60’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ‘இளையதளபதி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், ஹரிஷ் உத்தமன், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை திருநெல்வேலியை மையமாக வைத்து குடும்பப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் பரதன். தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். ‘வேதாளம்’ படத்தில் கணேஷாகவும், வேதாளமாகவும் இரண்டு வேடங்களில் அஜித் நடித்ததைப்போல, ‘விஜய் 60’ படத்தில் விஜய்யும் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாராம். அதில் ஒன்று அமைதியான கிராமத்து மனிதராகவும், மற்றொன்றில் சிட்டி ரௌடியாகவும் நடிக்கிறாராம். கிராமத்து கேரக்டருக்காக நெல்லை பாஷை பேசி நடித்து வருகிறாராம் விஜய்.

விரைவில் திருநெல்வேலியில் மீண்டும் படப்பிடிப்பை துவக்கவிருக்கிறதாம் விஜய் 60 படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;