ஆகஸ்ட் முதல் சிம்பு - விஜய்சந்தர் படம்!

தெலுங்கில் வெற்றிபெற்ற ‘டெம்பர்’ ரீமேக்கா இப்படம்?

செய்திகள் 31-May-2016 10:19 AM IST Chandru கருத்துக்கள்

பெரிய போராட்டத்திற்குப் பின்பு கடந்த வருடம் வெளியான சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாக மீண்டும் ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தருடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் சிம்பு. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘டெம்பர்’ படத்தைத்தான் தமிழில் விஜய் சந்தர் சிம்புவை வைத்து இயக்குகிறார் என முதலில் பேசப்பட்டது. ஆனால், அது உண்மையில்லையாம். சிம்புவிற்காக புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை தற்போது எழுதிக் கொண்டிருக்கிறாராம் விஜய் சந்தர்.

‘வாலு’ படத்திற்கு நேர்எதிரான வித்தியாசமான லக்கி பாய் கேரக்டரை சிம்புவுக்காக இந்த புதிய படத்தில் உருவாக்கியிருக்கிறாராம் விஜய் சந்தர். ஆகஸ்ட் இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;