ஏ.ஆர்.ரஹ்மான் புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்!

ஜப்பான் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ஃபுக்குவோகா விருது பெறுகிறார் ரஹ்மான்!

செய்திகள் 31-May-2016 9:54 AM IST VRC கருத்துக்கள்

ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு உயர் விருதாக ஜப்பான் நாட்டின் ஃபுக்குவோகா விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜப்பானின் ஃபுக்குவோகா விருது ஃபுக்குவோகா நகரத்தின் சார்பிலும், யோகடோபியா என்ற அமைப்பின் சார்பிலும் வழங்கப்படுகிறது. ஆசிய கலாச்சரத்தை பேணிகாக்கும் நபர்களுக்கு, அல்லது அமைப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது கிடைத்தது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, ‘‘ஃபுக்குவோகா விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கௌரவத்துக்கு நன்றி! உங்கள் அனைவரது அன்பைப் பற்றியும் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் நகரத்துக்கு வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;