‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றி படத்தை தொடர்ந்து சிபி ராஜ் நடித்துள்ள படம் ‘ஜாக்சன் துரை’. ‘பர்மா’ என்ற படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிபிராஜுடன் அவரது தந்தை சத்யராஜும் நடித்துள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்லார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து பட வெளியீடு சம்பந்தப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்தியுள்ள படக்குழுவினர் ‘ஜாக்சன் துரை’யை அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஹாரர் ரக படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிந்து மாதவி நடித்துள்ளார். இப்படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ளார்!
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
விஜய்சேதுப்தி நடிப்பில் ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ரஜாவும் இதயராணியும்’ ஆகிய...
‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து ஜித்து ஜோசஃப் தமிழில் இயக்கியுள்ள படம் ‘தம்பி’. கார்த்தி, ஜோதிகா,...