பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் இயக்கிய படங்கள் ‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’. இந்த படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ராஜீவ் மேனன்! இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இறுதியாக ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவி ஜி.வி.க்கு ஜோடியாக நடிக்க தேர்வாகியிருக்கிறார். இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’, ‘குரு’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராஜீவ் மேனன் கடைசியாக ஒளிப்பதிவு செய்த படம் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ என்பது குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...