1 மாதத்தில் 2 கோடி : ‘கபாலி’டா...!

1 மாதத்தில் 2 கோடி : ‘கபாலி’டா...!

செய்திகள் 30-May-2016 12:27 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது ‘கபாலி’. வரும் ஜூன் 10ஆம் தேதி சென்னையில் ‘கபாலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மே 1ஆம் தேதி யு ட்யூபில் வெளியிடப்பட்டது. இந்திய சினிமாவிலேயே எந்த படத்தின் டீஸருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு ‘கபாலி’ டீஸருக்கு கிடைத்தது.

முதல் 3 நாட்களிலேயே ‘கபாலி’ டீஸர் 1 கோடி முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அதோடு 2 லட்சம் பேரும் அப்போது அந்த டீஸரை லைக் செய்திருந்தனர். இப்போது, டீஸர் வெளியாகி 30 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் 2 கோடி பார்வையிடல்களைப் பெற்று அசத்தியுள்ளது. மேலும், 4 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த டீஸரை இப்போதுவரை ‘லைக்’ செய்துள்ளனர்.

தென்னிந்திய சினிமா டீஸர்களில் 1 கோடியை எட்டிய முதல் டீஸர் என்ற சாதனையை ஷங்கரின் ‘ஐ’ பட டீஸர் ஏற்படுத்தியிருந்தது. இப்போது 2 கோடியை எட்டிய முதல் தென்னிந்திய டீஸர் என்ற சாதனை ரஜினியின் ‘கபாலி’ டீஸர் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;