இரண்டு ஹீரோக்களுடன் சனம் ஷெட்டி நடிக்கும் படம்!

இரண்டு ஹீரோக்களுடன் சனம் ஷெட்டி நடிக்கும் படம்!

செய்திகள் 30-May-2016 12:18 PM IST VRC கருத்துக்கள்

பிரபா மற்றும் அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் படம் ‘தகடு’. இப்படத்தில் சனம் ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ‘ராகதேவி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற படம் நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் தங்கதுரை படம் குறித்து கூறும்போது, ‘‘தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்களின் கதை உண்டு! ஆனால் பேராசை கொண்ட மன்னர்கள் தான் மண்ணோடு மண்ணாக போனார்களே தவிர, இன்று வரை அந்த பேராசை என்னும் பெரும் பேய் ஏதோ ஒரு வடிவில் அழியாமல் உலாவி கொண்டு தான் இருக்கிறது. அப்படி பேராசை கொண்ட ஒருவனோடு பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் ஒரு அசாத்தியமான பயணம் தான் ‘தகடு’ படம்! கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்களில் சிலர் பாடத்தில் வரும் ஒரு வரலாறு சம்பந்தப்பட்ட ஒரு இடத்தை தேடி போகிறார்கள். அப்போது அவர்கள் தேடி போனது இல்லாமல் முக்கியமான ஒன்றை பார்க்கிறார்கள். அது என்ன? அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பது தான் படத்தின் திரைக்கதை’’ என்றார். இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ்.கார்த்திகேயன் கவனிக்க, சார்லஸ் மெல்வின்.எம் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொம்புவச்ச சிங்கம்டா டீஸர்


;