தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த சித்தார்த் அடுத்து ஒரு மலையாள படத்திலும் நடிக்கவிருக்கிறார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் நடிக்கும் ‘கம்மர சம்பவம்’ என்ற படத்தில் இரண்டு முக்கிய வேடங்கள் உண்டாம்! இதில் ஒரு வேடத்தில் திலீப் நடிக்க, மற்ற கேரக்டரில் சித்தார்த் நடிக்கவிருக்கிறார். இது சித்தார்த் நடிக்கும் முதல் மலையாள படமாகும். சித்தார்த்துக்கு கேரளாவிலும் பரவலாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பாய்ஸ்’, ‘காவியத்தலைவன்’, ‘ஜிகர்தண்டா’ முதலான படங்கள் கேரளாவிலும் ஓரளவுக்கு ஓடியுள்ளதால் சித்தார்த்துக்கும் அங்கு ரசிகரக்ள் இருக்கிறார்கள். திலீப்பும், சித்தார்த்தும் இணைந்து நடிக்கும் ‘கம்மர சம்பவம்’ படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.
‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ இம்மாதம் 20-ஆம் தேதி...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ஆம் தேதி வெளியாக...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி...