முதல்முறையாக போலீஸ் யூனிஃபார்மில் அர்விந்த்சாமி!

முதல்முறையாக போலீஸ் யூனிஃபார்மில் அர்விந்த்சாமி!

செய்திகள் 30-May-2016 11:25 AM IST Chandru கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘தளபதி’ மூலம் 1991ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் அர்விந்த்சாமி. தற்போது தனது சினிமா கேரியரில் 25வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் அர்விந்த் சாமி இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விதவிதமான கேரக்டர்கள் செய்துள்ள அவர், இதுவரை போலீஸ் வேடத்தில் நடித்ததில்லை. தற்போது அந்தக்குறை ‘போகன்’ படத்தின் மூலம் தீர்ந்துள்ளது.

‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கும் ‘போகன்’ படத்தில் அர்விந்த்சாமியும் நடிக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்தில் ஹீரோ, வில்லனாக நடித்த ஜெயம் ரவியும், அர்விந்த்சாமியும் ‘போகன்’ படத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். போலீஸ் யூனிஃபார்மில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரி யூனிஃபார்மில் அர்விந்த்சாமி காட்சியளித்தாலும் ‘போகன்’ படத்தில் அவர் நல்லவரா? கெட்டவரா? என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. இப்படத்திற்காக தற்போது ஜெயில் செட் ஒன்றில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம். விரைவில் பாடல் காட்சிகளுக்காக ஃபிரான்ஸ் செல்லவிருக்கிறதாம் ‘போகன்’ படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;