தேவாவுடன் பணியாற்றிய பாடலாசிரியர் காளிதாசன் மரணம்!

தேவாவுடன் பணியாற்றிய பாடலாசிரியர் காளிதாசன் மரணம்!

செய்திகள் 30-May-2016 10:42 AM IST VRC கருத்துக்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் களிதாசன் (வயது-68) காலமானார். ‘தாலாட்டு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான காளிதாசன், 1990-ல் பிரசாந்த் நடித்து, தேவா இசை அமைத்த ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தி ‘தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா…’ என்ற பாட்ல் எழுதினார். இப்பாடல் அப்போது சூப்பர் ஹிட்டானது! இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சல்ம்’ படத்தில் ‘தலை மகனே கலங்காதே, தனிமை கண்டு மயங்காதே…’ என்ற பாடல் எழுதி,அந்த பாடலும் ரசிகர்களிடையே பெரும் வர்வேற்பு பெற்றது. இப்படி, தேவா இசை அமைத்த பல படங்களில் காளிதாசன் பாடல்கள் எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ள காளிதாசன் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். திருச்சி சிறுகனூர் அருகில் உள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காளிதாசனின் ஏழ்மையை அறிந்து நடிகர் விஷால் சமீபத்தில் அவருக்கு 25,000 ரூபாய் உதவி வழங்கியிருந்தார்.. இந்நிலையில் பாடலாசிரியர் காளிதாசன் காலமானார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;