இது என்ன மாயம், ரஜினி முருகன் என இதுவரை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இரண்டு படங்கள்தான் ரிலீஸாகியிருக்கின்றன. ஆனால், அதற்குள் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் இந்த கேரளத்துப் பைங்கிளி. தனுஷுடன் ‘தொடரி’, சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, விஜய்யுடன் ‘விஜய் 60’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’ என 4 படங்களை கையில் வைத்திருக்கிறார் கீர்த்தி.
இதில், பிரபுசாலமன் இயக்கத்தில் தான் ‘நடிக்கும்’ படத்திற்கான டப்பிங் வேலைகளை நேற்று முடித்துக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் சரோஜா என்ற ‘டச்அப்’ பெண்ணாக அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ‘பூச்சியப்பன்’ கேரக்டருக்கான டப்பிங்கை ஒரே நாளில் தனுஷ் பேசி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ படத்தின் பாடல்கள் ஜூன் 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...