விஷால் பறக்கவிடும் காத்தாடி!

விஷால்  பறக்கவிடும் காத்தாடி!

செய்திகள் 30-May-2016 10:29 AM IST VRC கருத்துக்கள்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், நடிகை மகேஸ்வரியின் சகோதரருமான அவிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘காத்தாடி’. ‘கேல்கஸி பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்கும் இப்டபட்த்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்துள்ள தன்ஷிகா ‘காத்தாடி’ படத்தில் போலீஸ் ஆஃபீசராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘கத சொல்லப் போறோம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ள ‘காத்தாடி’ படத்தின் பாடல்களுக்கு பவன் இசை அமைக்க, பின்னணி இசையை தீபன் கவனிக்கிறார் ஜெமின் ஜோம் அயாநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஆக்‌ஷன் காமெடி படமாக உருவாகி இருக்கிறதாம்! ‘காத்தாடி’யின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஷால் இன்று இரவு 8 மணிக்கு வெளியிடவிருக்கிறார். அவிஷேக், தன்ஷிகாவுடன் இப்படத்தில் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாச ராவ், காளி வெங்கட் முதலனோரும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;