டீஸருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், டிரைலருக்கு ஏ.ஆர்.முருகதாஸ்!

டீஸருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், டிரைலருக்கு ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 30-May-2016 10:22 AM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’ சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இவர்களுடன் நிரோசா, சரவணன், ராஜேந்திரன், யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து படத்தின் டீஸரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அதன் பிறகு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் பாடல்களை வெளியிட்டார். இப்போது படத்தின் டிரைலரை மீண்டும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே ரிலீஸ் செய்விருக்கிறார்.

ஜூன் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் டிரைலரை வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;