‘24’ படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

‘24’ படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 30-May-2016 10:08 AM IST Chandru கருத்துக்கள்

மே 6ஆம் தேதி வெளியான ‘24’ திரைப்படம் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது. கோடைவிடுமுறைக்கு குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து கண்டுகளிக்கும் வகையில் படம் அமைந்திருப்பதால் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைவிட வெளிநாடுகளில் ‘24’ படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்திருக்கிறதாம். குறிப்பாக அமெரிக்காவில் இப்படம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘24’ படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான நடிகர் சூர்யா, படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து சமீபத்தில் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘‘24 படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடினோம். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே!’’ என்று கூறியுள்ளார்.

பதிலுக்கு நடிகர் சூர்யா, ‘‘சார்... உங்களின் மதிப்புமிக்க நேரத்தை எங்களோடு செலவு செய்ததற்கு, நாங்கள் நன்றி சொல்வது மட்டுமே ஈடாகாது!'' என்று ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;