இயக்குனர் பொன்ராம் துவக்கி வைத்த படம்!

இயக்குனர் பொன்ராம் துவக்கி வைத்த படம்!

செய்திகள் 28-May-2016 3:22 PM IST VRC கருத்துக்கள்

‘யாகவராயினும் நா காக்க’ படத்தை தொடர்ந்து ஆதியும், நிக்கி கல்ராணியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற பட நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை ஏவி.எம். ஸ்டுடியோவில் இயக்குனர் பொன்ராம் துவங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணியுடன் ஆனந்தராஜ், முனீஸ் காந்த், டேனியல், அருண் காமராஜ், சங்கிலி முருகன், மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் உதவியாளர் திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார். பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;