நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் புதிதாக துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் ‘இஷான் புரொடக்ஷன்ஸ்’. தனது மகன் இஷான் பெயரில் துவங்கியுள்ள இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியிருக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பாணையும்’. சுசீந்திரன் இயக்கிய ‘பாயும் புலி’ படத்திற்கு வசனம் எழுதிய அமுதேஷ்வர் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்க, அஷ்னா சவேரி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இது பிரபுவின் 200-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பூஜாகுமார், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் கமல்ஹாசனும் நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல் சிடியை நடிகர் சூர்யா வெளியிட, துஷ்யந்தின் தந்தை ராம்குமார் பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குனர் அமுதேஷ்வர் படம் குறித்து கூறும்போது,
‘‘காரைக்குடியை சேர்ந்த நிறைய பேர் மலேசியாவில் ஹோட்டல்கள் நடத்துகிறார்கள். அப்படி மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வரும் ஒரு ஃபேமிலிக்குள் நடக்கும் மனம்தாங்கல் பற்றிய கதைதான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. படத்தின் பெரும் பகுதி கதை மலேசியாவிலேயே நடப்பது மாதிரி! அதானல் மலேசியாவின் முக்கிய இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்திற்கு ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்று டைட்டில் வைத்ததற்கான காரணம், நம் மண்ணோடு ஒன்றிய விஷயம் மீன் குழம்பு! அதைப் போல மண் பானையும்! இதை வைத்து மண் பானையில் வைத்த மீன் குழம்பு என்று யாரும் அர்த்தம் கொள்ள வேண்டாம். படத்தை பொறுத்தவரை மீன் குழம்பு வேறு, மண் பானை வேறு! அது என்ன என்பது படத்தை பார்க்கும்போது தெரிந்து விடும்’’ என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெ.லக்ஷமன் கவனித்திருக்க, பாடல்களை மதன் கார்க்கி எழுத, டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...