சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிவிபி சினிமா நிறுவனம்!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிவிபி சினிமா நிறுவனம்!

செய்திகள் 28-May-2016 12:15 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் முக்கிய நிறுவனங்களில் பிவிபி சினிமா நிறுவனமும் ஒன்று. தமிழில் நான் ஈ, விஸ்வரூபம், பெங்களூர் நாட்கள், தோழா உட்பட பல படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் குறித்த வதந்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பிவிபி நிறுவனம். அந்த அறிக்கை இங்கே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது...

"வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது. தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும். ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமா தான். அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் . அதுமட்டுமின்றி, PVP சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது " என்று சொல்கிறது PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - புதிய டிரைலர்


;