மீண்டும் ‘தல’யுடன் நான் : அனிருத் அறிவிப்பு

மீண்டும் ‘தல’யுடன் நான் : அனிருத் அறிவிப்பு

செய்திகள் 28-May-2016 11:19 AM IST Chandru கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவர் அனிருத். அவரின் பின்னணி இசையில் உருவாகியிருந்த சண்டைக்காட்சிகளும், மாஸ் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு, ‘ஆலுமா... டோலுமா...’ பாடலாலால், கடந்த தீபாவளி அன்று தமிழகத்திலுள்ள அத்தனை திரையரங்குகளும் அதிர்ந்ததை யாரும் மறந்திருக்கவும் முடியாது. இந்நிலையில், வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அஜித்தின் ‘தல 57’ படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார் என்ற தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இப்போது தனது ட்வீட் மூலம் அதிகாரபூர்வமாக அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 2வது வாரத்தில் துவங்கும் எனத் தெரிகிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;