ஹாட் பிசினஸில் ‘கபாலி’

ஹாட் பிசினஸில் ‘கபாலி’

செய்திகள் 28-May-2016 10:44 AM IST Chandru கருத்துக்கள்

‘கபாலி’ டீஸரின் 2 கோடி பார்வையிடல்களுக்கு இன்னும் நாற்பதாயிரம் மட்டுமே மீதமிருக்கின்றன. இன்று அந்த சாதனை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் பாடல்கள் உரிமை, கன்னட வெளியீட்டு உரிமை ஆகியவற்றின் வியாபாரங்கள் சூடுபிடித்துள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.

‘கபாலி’ படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆடியோ ரைட்ஸை திங் மியூசிக் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியிருக்கிறது. அதேபோல், இதுவரை எந்த தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறதாம் ‘கபாலி’ படத்தின் கன்னட வெளியீட்டு உரிமை. இதனை கைப்பற்றியிருப்பவர் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆடியோ வெளியீட்டிற்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் இதர ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை யார் கைப்பற்றியிருக்கிறார்கள் என்ற முழு விவரமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் ‘கபாலி’ படம் ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் 4 மொழிகளில் வெளியாகிறது. மலாய் மொழியில் மலேசியாவில் வெளியாகும் முதல் தமிழ்படம் ‘கபாலி’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;