‘ராசாளி..’ பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

‘ராசாளி..’ பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

செய்திகள் 28-May-2016 10:12 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்களில் ஏற்கெனவே வெளியான ‘தள்ளிப்போகாதே...’ பாடல் மெகாஹிட் அடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘ராசாளி...’ என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார்கள். வரலாற்றுப் புகழ் வாய்ந்த அந்தக்காலத்துப் பாடல்களின் மெட்டைக் கொண்டு, தன் புதுமை இசையின் மூலம் வித்தியாசமாக இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம் ஆகிய பாடல்களை காப்பியடித்தே ரஹ்மான் இப்பாடலை உருவாக்கியிருப்பதாக, பாடல் குறித்த முழுவிவரம் தெரியாத சிலர் யு டியூப்பில் ‘கமென்ட்’ செய்து வருகிறார்கள். இப்பாடல் குறித்து ஏற்கெனவே முழு விளக்கத்தையும் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ரஹ்மான் வௌயிட்டுள்ளார். அது இங்கே உங்களுக்காக...
உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;